யாழில் தொடரும் மர்மம்! ஒரே இடத்தில் தொடர்ந்து மீட்கப்படும் சடலங்களால் அச்சம்

யாழ். நல்லூர் யமுனா ஏரியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்று அதிகாலை யமுனா ஏரியில் மிதந்து வந்த நிலையில் பொதுமக்களால் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் கோவில் வீதியைச்சேர்ந்த 27 வயதுடை மாரிமுத்து கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், கடந்த மூன்று நாட்களிற்கு முன்னர் இவர் காணாமல் போயிருந்ததாகவும் அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அண்மையில் தவில் வித்துவான் ஒருவர் யமுனா ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். அந்தச் சம்பவம் நடந்து ஓரிரு வாரங்களில் மீண்டும் யமுனா ஏரியில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை அந்தப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Be the first to comment on "யாழில் தொடரும் மர்மம்! ஒரே இடத்தில் தொடர்ந்து மீட்கப்படும் சடலங்களால் அச்சம்"

Leave a comment

Your email address will not be published.


*