கொழும்பில் சீனப் பெண்ணின் உல்லாச விடுதி! பல பெண்கள் கைது

கொள்ளுப்பிட்டியில் சீன பெண்களால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி ஒன்று பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பெண்களை ஈடுபடுத்தி விபச்சார விடுதி நடத்திச் செல்வதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தேடுதல் ஆணை பெற்று சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட சீன நாட்டு பெண்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 39, 38, 48, 45 வயதுடையவர்களாகும். இவர்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் போது இலங்கையில் தங்கியிருப்பதற்கு வீசா இல்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் கொள்ளுபிட்டி பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட பெண்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Be the first to comment on "கொழும்பில் சீனப் பெண்ணின் உல்லாச விடுதி! பல பெண்கள் கைது"

Leave a comment

Your email address will not be published.


*