150 அடி உயரத்தில் திருமணம்: உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஜோடி… வைரல் புகைப்படங்கள்

ஸ்காட்லாந்தில் 150 உயரம் கொண்ட ராட்சஷ கிரேன் மீது நின்று கொண்டு காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேரி என்ற இளைஞரும், கேட் என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள்.

எல்லோரையும் போல சாதாரணமாக திருமணம் செய்யக்கூடாது என முடிவெடுத்த அவர்கள் வித்தியாசமான முறையை கையாண்டனர்.

அதன்படி 150 அடி உயரம் கொண்ட கிரேன் மீது ஏறி நின்று திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.

இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் நண்பர்கள் புடைச்சூழ திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் புதுமண ஜோடிகள் முத்தம் கொடுத்து மகிழ்ந்தார்கள்.

இது குறித்து கேட் கூறுகையில், இந்த வித்தியாச திருமண யோசனை என் கணவருடையது தான்.

அவர் எல்லாவற்றையும் புதிய கோணத்தில் தான் செய்யவிரும்புவார் என கூறியுள்ளார்.

தம்பதிகள் திருமணம் செய்ய உதவியாக இருந்த கிரேன் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும் ஸ்காட்லாந்தின் மிகவும் தனித்துவமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் இடத்தில் கிரேன் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Be the first to comment on "150 அடி உயரத்தில் திருமணம்: உதட்டோடு உதடு முத்தம் கொடுத்த ஜோடி… வைரல் புகைப்படங்கள்"

Leave a comment

Your email address will not be published.


*