அக்காவின் காதலனை திருமணம் செய்த தங்கை: துரோகத்தால் துடித்து போன அக்கா

அக்காவின் காதலனை தங்கை திருமணம் செய்து கொண்டதையடுத்து துடித்து போன அக்கா, தங்கையுடனான உறவை முறித்து கொண்டுள்ளார்.

டயானா என்ற பெண்ணும் கெமிரான் என்ற இளைஞரும் சில காலமாக டேட்டிங் செய்து வந்துள்ளனர்.

டயானாவின் தங்கையான கயீட் இளைஞர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவருடனே தங்கியுள்ளார்.

இந்நிலையில் கயீட்டுக்கும் அவர் காதலருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டுள்ளது, இனி அவரோடு சேர்ந்து வாழ முடியாது என முடிவெடுத்த கயீட் காதலரை நிரந்தரமாக பிரிந்துள்ளார்.

பின்னர் தனது அக்காவான டயானா வீட்டுக்கு வந்துள்ளார்.

அங்கு கெமிரானும் தங்கியிருந்த நிலையில் அவருடன் நல்ல நட்பாகியுள்ளார் கயீட்.

இதனிடையில் நட்பானது மெல்ல இருவருக்கும் காதலாக மாறியுள்ளது.

டயானாவை ஒரேடியாக மறந்த கெமிரான் கயீட்டை உயிருக்கு உயிராக நேசிக்க தொடங்கினார்.

அதே போல கயீட்டும் கெமிரானை உயிராக நேசித்தார்.

இதையடுத்து தங்கள் காதலை டயானாவிடம் சொல்ல இருவரும் முடிவெடுத்து அவரிடம் கூறினார்கள்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த டயானா தன் காதலனை தனக்கே விட்டுதரும்படி தங்கையிடம் கேட்டுள்ளார்.

ஆனால் இதற்கு கயீட்டும், கெமிரானும் ஒத்து கொள்ளாத நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இச்சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் ஆகிறது. தங்கை தனக்கு துரோகம் இழைத்துவிட்டதால் அவருடன் பேசுவதை நிறுத்திய டயானா அவருடனான உறவையே முறித்து கொண்டுள்ளார்.

இதனிடையில், டயானாவை மிஸ் செய்வதாகவும், தன்னை மன்னித்து அவர் ஏற்று கொள்வார் என நம்புவதாகவும் கயீட் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நடந்த நாடு குறித்த தகவல் வெளியாகவில்லை.

Be the first to comment on "அக்காவின் காதலனை திருமணம் செய்த தங்கை: துரோகத்தால் துடித்து போன அக்கா"

Leave a comment

Your email address will not be published.


*