முள்ளியவளையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை! நடந்தது என்ன?

மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technologg and management பிரிவில் கல்விகற்று வரும் 24 அகவையுடைய இராசநாயகம் நிறோசிகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கடந்த 26 ஆம் திகதி சென்றதாக குறிப்பிட்டப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த மாணவி நேற்று காலை அவரது வீட்டு முற்றத்தில் நின்ற மாமரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார் என பெற்றோர் கண்ணீருடன் தெரிவித்தனர்.

Be the first to comment on "முள்ளியவளையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை! நடந்தது என்ன?"

Leave a comment

Your email address will not be published.


*