நான்கு முறை உயிரிழந்து மீண்டும் உயிர் பிழைத்த நபர்: வியக்கவைக்கும் சம்பவம்

பிரித்தானியாவை சேர்ந்த நபரின் இதயம் நான்கு முறை துடிப்பதை நிறுத்தி அவர் மரணித்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக மீண்டும் உயிர் பிழைத்துள்ளார்.

பிர்மிங்கமை சேர்ந்தவர் ஜாஸ்கிரண் மதாஹர் (36). இவர் தனது மனைவி கவலுடான பத்தாம் ஆண்டு திருமண நாளை கொண்டாட கடந்த ஏப்ரல் மாதம் லாஸ்ஏஞ்சல்ஸுக்கு சென்றுள்ளார்.

சுற்றுலா முடிந்து ஏப்ரல் 13-ஆம் திகதி வீட்டுக்கு வந்த நிலையில் ஜாஸ்கிரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இதயம் துடிப்பது நின்றுள்ளது.

இதையடுத்து கவல் மருத்துவமனைக்கு போன் செய்த நிலையில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஜாஸ்கிரனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது.

அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மூலம் ஜாஸ்கிரண் இதயத்தை செயல்பட வைத்தனர்.

பின்னர் பத்து நிமிடம் கழித்து மீண்டும் இதயம் நின்று போனது, இதையடுத்து மீண்டும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை மூலம் இதயத்தை செயல்பட வைத்தனர்.

இதே போல சிறிய இடைவெளியில் மீண்டும் இரண்டு முறை இதயம் நின்று மரணமடைந்துள்ளார்.

பின்னர் சிறப்பு இதய மருத்துவர்கள் பலரின் தீவிர சிகிச்சையால் ஜாஸ்கிரணின் இதயம் செயல்பட தொடங்கியது.

தற்போது பேஸ்மேக்கர் எனப்படும் இதயத்தை இயங்க செய்யும் கருவி ஜாஸ்கிரணுக்கு பொருத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஜாஸ்கிரண் கூறுகையில், 13-ஆம் திகதி என்பது ராசியில்லாத நாள் என கூறுவார்கள், ஆனால் அந்த நாள் தான் என் உயிரை காப்பாற்றியுள்ளது.

நான் உயிருடன் இருப்பதை நம்பமுடியாத அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார்.

Be the first to comment on "நான்கு முறை உயிரிழந்து மீண்டும் உயிர் பிழைத்த நபர்: வியக்கவைக்கும் சம்பவம்"

Leave a comment

Your email address will not be published.


*