பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த பெண்: திருமண நாளில் கிடைத்த அதிர்ச்சி தகவல்

கேரள மாநிலத்தில் பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண் திருமணம் செய்துகொண்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில், ஸ்ரீராம் என்ற பெயரில் கொல்லத்தை சேர்ந்த ஒருவர் பணியாற்றி வந்தார்.

அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர்.

இந்த காதல் 7 ஆண்டுகளை கடந்த நிலையில், ஸ்ரீராமிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு இளம்பெண் கூறியுள்ளார். பின்னர் தனது காதல் குறித்து வீட்டிலும் எடுத்துக்கூறி, அவர் திருமணத்துக்கு சம்மதமும் வாங்கிவிட்டார். இவர்களது திருமணத்தை ஒரு கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.

ஆனால், திருமணத்திற்கு வரவிருந்த தனது பெற்றோர் விபத்தில் சிக்கிவிட்டதாக கூறி திருமணத்தை நிறுத்திவிட்டு, பதிவு திருமணம் செய்துகொள்ளலாம் என ஸ்ரீராம் கூறியுள்ளார்.

இதன்படி, இவர்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்னர் தனது பெற்றோரிடம் மணமகளை அழைத்து செல்லாமல் ஒரு சிறிய அறை எடுத்து தங்கவைத்துள்ளார் ஸ்ரீராம்.

இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர் பேசுவதாக கூறி தொலைபேசியில் அழைப்பு வந்தது. அதில் அவர், உனக்கு தாலிகட்டிய ஸ்ரீராம் ஆண் அல்ல, அவர் ஒரு பெண் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அந்த இளம்பெண் உடனடியாக பெற்றோரிடம் விவரத்தை தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து பெற்றோர் பொலிசில் தெரிவித்துள்ளனர்.

அப்போது, ஸ்ரீராம் என்ற பெயரில் ஆண் வேடத்தில் இருந்தவர், பெண்தான் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணிடம் நகை மோசடி செய்வதற்காக 7 ஆண்டுகளாக நாடகமாடி வந்ததும் தெரியவந்தது.

தனக்கு ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக இப்படி நாடகமாடினேன் என கூறியுள்ளார், இந்த விவகாரம் தொடர்பாக காதலித்த பெண் தரப்பில் புகார் எதுவும் பொலிசாரிடம் அளிக்கப்படவில்லை.

பெண் ஒருவர் ஆணாக நடித்து இளம்பெண் ஒருவரை காதலித்து மோசடிக்கு முயன்ற இந்த ருசிகர சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Be the first to comment on "பெண்ணை 7 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்த பெண்: திருமண நாளில் கிடைத்த அதிர்ச்சி தகவல்"

Leave a comment

Your email address will not be published.


*