அம்மாவின் ஆசையை நிறைவேற்ற சென்ற மகனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

பலாமரத்தில் பறித்த பலாக்காய் தலையில் வீழ்ந்ததனால் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளின் மேலுறைகளை சீர்செய்யும் தொழில் செய்கின்ற நபரொருவர் தனது பெற்றோர் வசிக்கும் பாதுகை, வேரகல பிரதேசத்திற்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

இவ்வாறு நேற்றைய தினமும் தனது பெற்றோரைச் சந்திக்கச் சென்ற நிலையில், அவரது தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க தனக்கும் தாய்க்கும் சேர்த்து வீட்டின் பின்புறத்தில் இருந்த பலா மரத்தில் பலாக்காய் பறித்தார்.

இதன்போது பறித்த பலாக்காய் இவரின் தலையின் மேலே வீழ்ந்துள்ளதனால் படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தாரின் உதவியுடம் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

எனினும் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக பாதுகை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திடீர் மரண பரிசோதகர் மரண விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலத்தை அவிசாவளை சட்ட வைத்தியரிடம் ஒப்படைத்து, அவரின் அறிக்கையைப் பெற்று சமர்ப்பிக்குமாறு அவிசாவளை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Be the first to comment on "அம்மாவின் ஆசையை நிறைவேற்ற சென்ற மகனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!"

Leave a comment

Your email address will not be published.


*