மேலாடையை அவிழ்த்து வன்கொடுமை! அசையாமல் நின்ற பெண் சந்தித்த அவலங்கள்

சமூக பரிசோதனைக்காக பொது மக்கள் முன்னிலையில், பெண்ணொருவர் ஆறு மணிநேரம் அசையாமல் நின்று பல இன்னல்களை சந்தித்துள்ளார்.

செர்பியாவைச் சேர்ந்தவர் மெரினா அப்ராமோவிக். செயல்திறன் கலைஞரான இவர் சமூக பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டார்.

அதற்காக அவர் 6 மணிநேரம் பொதுமக்கள் முன்னிலையில் மெரினா அசையாமல் இருக்க வேண்டும். யார் அவரை என்ன செய்தாலும் அதற்கு அவர் எதிர்வினை ஆற்றாமல் இருக்க வேண்டும். சமூகத்தில் மனிதர்களின் மனநிலை என்ன என்பதை காட்ட இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.

முதலில் அங்கிருந்த மக்கள் அவரது நிற்கும் நிலையை மாற்றினர். பிறகு சிலர் அவரை அமர வைத்தனர். மெரினாவை அவமானப்படுத்தவே இவ்வாறு அவர்கள் செய்தனர்.

சிலர் குண்டூசிகளைக் கொண்டு அவரது உடலில் ஒட்டினர். ஒருவர் பிளேடை எடுத்து அவரது கழுத்தில் அறுத்தார். ஆனால் அப்போதும் மெரினா சிறிதளவும் நகராமல் அமைதி காத்தார்.

இதற்கு மேலாக சிலரோ, மெரினாவின் ஆடையை அவிழ்த்து, அவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினர். அதையும் பொறுத்துக் கொண்ட அவர், ஆறு மணிநேரம் கழித்து, தன்னை தவறான முறையில் தீண்டியவர்கள் முன்பு நடந்து சென்றார்.

அப்போது, ஒருவரால் கூட அவரது முகத்தைப் பார்க்க முடியாமல் வெட்கித் தலை குனிந்தனர். இந்த பரிசோதனையின் மூலம், மனிதர்கள் வாய்ப்பு கிடைத்தால் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து மெரினா அப்ராமோவிக் கூறுகையில், ‘மனிதர்களில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகுபாடு இதற்கு இல்லை. வாய்ப்புகள் அமைந்தால் யார் வேண்டுமானாலும் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுவார்கள்’ என தெரிவித்தாராம்.

Be the first to comment on "மேலாடையை அவிழ்த்து வன்கொடுமை! அசையாமல் நின்ற பெண் சந்தித்த அவலங்கள்"

Leave a comment

Your email address will not be published.


*