பெற்றோர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கால்கள் இழந்த குழந்தை…. நெகிழ வைக்கும் கண்ணீர்க்கதை

டோனி என்ற மூன்று வயது சிறுவன் பிறந்து 41 நாட்களில் பெற்றோர்களால் விளையாட்டுத்தனமாக ஊஞ்சலாடப்படும்போது கால்களின் எலும்புகள் முறிந்துள்ளது.

அதனைப் பற்றி கவலைப்படாத தாயும் தகப்பனும் 10 நாட்கள் தாமதித்து குழந்தையை மோசமான விபத்து என்று காரணம் கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

குழந்தை மருத்துவமனைக்கு வந்த போது மரணத்தின் விளிம்பில் இருந்தது. காரணம் 10 நாட்களாக கால்களின் எலும்புகள் முறிந்த நிலையில் உடனடியாக கவனிக்காததால் எலும்புகள் சீழ் பிடித்துள்ளன.

மேலும் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்ட 41 நாட்களே ஆன குழந்தை பிழைக்கும் வாய்ப்பு மிக குறைவாகவே இருந்துள்ளது.

குழந்தை 4 மாதங்கள் வரை மருத்துவமனையிலேயே இருந்துள்ளது. அதன் பின் கென்ட் பகுதியில் உள்ள கிங்ஸ் ஹில்லில் இருக்கும் பவுலா மற்றும் மார்க் ஹோகேல் ஆகிய இருவரின் பாதுகாப்பில் குழந்தை விடப்பட்டுள்ளது.

மிகப்பெரிய விபத்து என்று கூறி மருத்துவமனையில் சேர்த்ததாலும் காயம் செய்ததற்கான சாட்சியங்கள் இல்லாததாலும் டோனியின் பெற்றோர் மீது சிபிஎஸ் வழக்கை தள்ளுபடி செய்தது.

அதனால் அந்தக் குழந்தை தனது பெற்றோரான டோனி ஸ்மித் (47) மற்றும் ஜோடி சிம்சன் (24) ஆகியோரை குறிப்பிட்ட இடைவெளியில் சந்தித்து வந்தது.

இதற்கிடையில் சிபிஎஸ்சின் தீர்ப்பை ஏற்காத பவுலா குற்றப்பிரிவு காவல்துறையினரை அணுகி இக்குழந்தைக்கான நியாயம் கேட்டுப் போராடினார்.

அதன்மூலம் தவறிழைத்த நிஜப் பெற்றோருக்கு ஆளுக்கு 10 வருடம் சிறை தண்டனையும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் இந்த வளர்ப்புப் பெற்றோரான பவுலா மற்றும் மார்க்.

தற்போது மூன்று வயதாகும் டோனி ஒரு தொலைக்காட்சி நிகழ்வின் நேரலையில் வந்து அனைவரையும் பார்த்து கையசைத்தது பார்ப்பவரின் கண்களை குளமாக்கியது.

காரணம் அத்தனை அழகான குழந்தை முழங்கால்களுக்கு கீழ் எதுவும் இல்லாமல் தனக்கு நடந்துள்ள சோகம் தெரியாமல் புன்னகைக்கிறது…

பெற்றோரின் கவனக் குறைவினால் கால்களை இழந்த டோனி இப்போது தனக்காக போராடிய வளர்ப்பு பெற்றோருடன் நிம்மதியாக வளர்ந்து வருகிறான்.

Be the first to comment on "பெற்றோர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கால்கள் இழந்த குழந்தை…. நெகிழ வைக்கும் கண்ணீர்க்கதை"

Leave a comment

Your email address will not be published.


*