மனைவியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன்

தமிழகத்தை சேர்ந்த ராம் என்பவர் மலேசியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மலேசியா சென்ற பின்னர் ஒருமுறை மட்டுமே தமிழகத்திற்கு வந்துசென்றுள்ளார்.

அங்கு இவர் உழைக்கும் பணத்தினை ஒவ்வொரு மாதமும் தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார். அதனைவைத்து தனது பிள்ளைகளை சித்ரா படிக்கவைத்துள்ளார்.

இந்நிலையில், தனது கணவன் அனுப்பிய பணத்தில் சொகு வாழ்க்கை வாழ்ந்து வந்த சித்ரா, தனது கணவர் அருகில் இல்லாத காரணத்தால் ராஜா என்ற நபருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.

இவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால், இவரையே தனது கணவர் என அனைவரிடமும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் குழந்தைகளின் பள்ளிக்கூட விழாவுக்கு செல்கையில் கூட ராஜாவை அழைத்து சென்று இவர்தான் குழந்தைகளின் தந்தை என அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.

இப்படி கணவன் அனுப்பும் பணத்தை வைத்து கள்ளக்காதலன் மற்றும் குழந்தைகளோடு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்த கணவர் ராம், தான் தமிழகம் வருவதை தெரிவிக்கவில்லை.

விமான நிலையத்தில் இறங்கிய கணவர் சந்தோஷமாக வந்துகொண்டிருக்கையில், சித்ரா தனது கள்ளக்காதலனோடு சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, கோவா செல்ல திட்டமிட்டு அதன்படி, விமான நிலையம் சென்றுள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், விமான நிலையத்தில் வைத்து மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார். மனைவியை நேராக வீட்டிற்கு இழுத்துசென்று, நடந்தவை குறித்து அனைத்தையும் அறிந்து, தனது மாமனார் மற்றும் பொலிசிடம் புகார் அளித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து மனைவி மற்றும் கள்ளக்காதலனை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

Be the first to comment on "மனைவியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன்"

Leave a comment

Your email address will not be published.


*