திருகோணமலையில் மூன்று இளைஞர்கள் கைது

திருகோணமலையில் கசிப்பு, கோடா என்பவற்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தங்கநகர் குளக்கட்டினூடாக மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்று வீடு திரும்புவதாக கூறிய நபரை சேறுநுவர பொலிஸார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து 38 கசிப்பு போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யபப்பட்ட சந்தேகநபர் கிளிவெட்டி, தங்கநகர் பகுதியை சேர்ந்த வை.விமலகாந்தன் (27 வயது) என தெரியவருகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

இதேவேளை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கும்புறுபிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் கும்புறுபிட்டி 05ம் வட்டாரத்தை சேர்ந்த கே.பிரசாந்தன் (23 வயது) மற்றும் யோகராஜா சுதர்ஷன் (30 வயது) எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து 13 கசிப்பு போத்தல்களும், 88 கோடா போத்தல்களும் கைப்பற்றப்பட்டதாகவும், கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Be the first to comment on "திருகோணமலையில் மூன்று இளைஞர்கள் கைது"

Leave a comment

Your email address will not be published.


*