வெறும் 20 நிமிடம் மட்டும் கைத்தட்டுங்க…. அப்பறம் நடக்கும் அதிசயத்தைப் பாருங்க

பொதுவாக, அடுத்தவர்களின் நற் செயல்களுக்காகவும் சாதனைகளுக்காகவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் பாராட்டவுமே மட்டுமே நாம் கை தட்டுகிறோம். சிலர் கை தட்டிக் கொண்டே பாட்டு பாடுவார்கள், கோவில் போன்ற இடங்களில் பஜனை பாடும்போதும் கை தட்டிக் கொண்டிருப்பார்கள்.

கை தட்டுவது என்பது அடுத்தவர்களை உற்சாகப்படுத்தும் விஷயம் மட்டுமல்ல.கை தட்டுபவர்களுக்கும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். கை தட்டுவதும் ஒரு விதமான உடற்பயிற்சி தான். கை தட்டுவதன் மூலமாகவே ஏராளமான நோய்களை கட்டுப்படுத்த முடியும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரண்டு உள்ளங்கைகளையும் சேர்த்து தட்டும்போது, மூளையின் பெரும்பான்மையான பகுதிகள் இயக்கப்படுகின்றன. உடலின் பல்வேறு உறுப்புகளின் செயல்பாட்டையும் இயக்கக்கூடிய 39 அக்குபஞ்சர் புள்ளிகள் உள்ளங்கைகளில் தான் இருக்கின்றன.

அதனால் தினமும் காலையில் 10 முதல் 20 நிமிடங்கள் வரையிலும் கைகளைத் தட்டுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. அது நாள் முழுக்க சுறு சுறுப்பாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.

தினமும் கை தட்டுவதால் ஜீரணக்கோளாறுகள் நீங்கும். இன்றைய காலகட்டத்தில் 20 வயதைக் கடந்தவுடனேயே முதுகுவலியும் மூட்டுவலியும் வந்து விடுகின்றன. ஆனால் தினமும் 20 நிமிடங்கள் வரை கை தட்டினால் முதுகுவலியும் மூட்டுவலியும் இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

வாதம், ரத்த அழுத்தம் போன்றவையும் கை தட்டுவதால் குணமாகும். ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் வரை புன்னகையுடன் கை தட்டிக் கொண்டிருந்தால், இதயம் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் குறையும் என்கின்றனர் மருத்துவர்கள்.

குழந்தைகளுக்கு தினமும் கை தட்டும் பழக்கத்தை பயிற்சியாகக் கொடுத்தால் அவர்களின் வார்த்தை உச்சரிப்பு தெளிவாக இருக்கும். கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். யப்பா! கைத் தட்டுவதால் ஒரு மனிதனுக்கு இத்தனை நன்மைகளா? நாம் எல்லோருமே ஆரோக்கியமாக வாழ தினமும் கை தட்டலாமே!

Be the first to comment on "வெறும் 20 நிமிடம் மட்டும் கைத்தட்டுங்க…. அப்பறம் நடக்கும் அதிசயத்தைப் பாருங்க"

Leave a comment

Your email address will not be published.


*