மகனை கொலை செய்த வழக்கில் கைதான பிரபல எழுத்தாளர் ரத்த வாந்தி எடுத்து மரணம்

மதுரையில் மகனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர் செளபா என்கிற செளந்தரபாண்டியன் மதுரை அரசு மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார்.

எழுத்தாளர் சௌபா குடிபோதைக்கு அடிமையான தனது மகன் விபினை அடித்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர் சிறையில் ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் மரணமடைந்தார்.

Be the first to comment on "மகனை கொலை செய்த வழக்கில் கைதான பிரபல எழுத்தாளர் ரத்த வாந்தி எடுத்து மரணம்"

Leave a comment

Your email address will not be published.


*