அரசியலில் குதிக்கும் அடுத்த நடிகர்!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசன் அரசியலில் இறங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸும் அரசியலில் குதிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் 24ம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்து லாரன்ஸ் தெரிவிப்பார் என்றும், சூப்பர்ஸ்டாரின் மிகப்பெரிய ரசிகரான அவர், ரஜினிகாந்துக்கு அரசியல் காவலனாக இருக்க திட்டமிட்டுள்ளதாகவும், அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ரஜினியின் கட்சியில் லாரன்ஸ் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Be the first to comment on "அரசியலில் குதிக்கும் அடுத்த நடிகர்!"

Leave a comment

Your email address will not be published.


*