ஹீரோயின் ஆனார் ‘பிக்பாஸ்’ ஜூலி!!

தமிழ்நாட்டு வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக ‘ஜல்லிக்கட்டு போராட்டம்’ அமைந்தது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற ஜூலி என்கிற ஜூலியானா ரோஸும், போராட்டத்திற்கு பிறகு மிகவும் பாப்புலராகி விட்டார். வீர தமிழச்சி என்றே ஜூலியை கொண்டாடினர்.

ஆனால், அது பிக் பாஸ் நிகழ்ச்சி வரைக்கும் தான் நீடித்தது. கமல் ஹாசன் நடத்திய அந்த நிகழிச்சிக்கு பிறகு, தலையில் வைத்து கொண்டாடியவர்கள் அனைவர்க்கும் ஜூலி மீது வெறுப்பேற்பட்டுவிட்டது. ஆனால், சின்னத்திரையில் தற்போது ஜூலி டிவி தொகுப்பாளினியாக இருக்கிறார். விளம்பரங்களிலும் நடிக்கும் ஜூலி, நடிகர் விமல் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகில் நாயகியாக காலடியெடுத்து வைக்க இருக்கிறார் ஜூலி. கே7 தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. துரை சுதாகர், படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார்.

படத்தின் டைட்டில் மற்றும் இதர விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது குறித்து ஜூலி, “ஸ்கிரிப்ட் கேட்டதும் பிடித்துவிட்டது. இப்படம் என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்” என்றார்.

Be the first to comment on "ஹீரோயின் ஆனார் ‘பிக்பாஸ்’ ஜூலி!!"

Leave a comment

Your email address will not be published.


*