கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய இருவர்! பொலிஸார் வெளியிட்ட காணொளி

கொழும்பில் சூட்சுமமான முறையில் மோட்டார் சைக்கிள்களை கடத்தும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

அவர்கள் தொடர்பான காணொளியை ஒன்றை வெளியிட்டு, பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பிலியந்தல பொலிஸ் பிரிவின், ஜாலியகொட பிரதேசத்தில் அமைந்துள்ள BB டெக் நிறுவனத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இரண்டு நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைபாட்டிற்கமைய பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளை இருவர் திருடி செல்லும் காட்சி அருகில் இருந்த கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது.

சந்தேக நபர்களின் புகைப்படங்கள் மற்றும் சிசிடீவி காட்சிகளை வெளியிட்டுள்ள பொலிஸார் அவர்கள் தொடர்பான தகவல்களை கோரியுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் அறிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு பொலிஸார் பொது மக்களிடம் கேட்டு கொண்டுள்ளனர்.

பிலியந்தலை பொலிஸ் நிலையம் – 0112614222, 0112614258

பிலியந்தலை பொலிஸ் பொறுப்பதிகாரி – 0718591665, 0717069063

குற்ற பொறுப்பதிகாரி – 0772830345

Be the first to comment on "கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய இருவர்! பொலிஸார் வெளியிட்ட காணொளி"

Leave a comment

Your email address will not be published.


*