விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!


அந்நிய செலவாணி வழக்கில் குற்றவாளியான விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக டெல்லி நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டு அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கின் விசாரணை டெல்லி பாட்டியாலா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு ஆஜராகுமாறு மல்லையாவிற்கு பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

விசாரணையின் போது, மல்லையா விசாரணைக்கு ஆஜாராகததை அமலாக்கத்துறை முன்வைத்தது. இதனையடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் விஜய் மல்லையாவிற்கு ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது.

இந்நிலையில் இன்று நடந்த விசாரணையிலும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இன்று டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Be the first to comment on "விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!"

Leave a comment

Your email address will not be published.


*