யாழில் கைத்தொலைபேசியினால் 17 வயது மாணவனுக்கு நடந்த வந்த கொடூரம்

 

யாழ்ப்பாணத்தில் ஆடம்பரத்திற்காக மிகவும் விலை உயர்ந்த கையடக்க தொலைபேசி வாங்கிக் கொடுக்க மறுத்தமையினால் மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

நீர்வேலி தெற்கைச் சேர்ந்த 17 வயதான கிருஸ்ணபிள்ளை கோபு என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 25ஆம் திகதி தாயாரிடம் இலட்ச ரூபா பெறுமதியான தொலைபேசியை வாங்கித் தருமாறு கோரியுள்ளார். எனினும் அதற்கு தாய் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவன் அறைக்குள் சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.

தூக்கில் தொங்கிய மகனை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் சேர்ந்த போதும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவனின் குடும்பத்தார் கமத்தொழிலில் ஈடுபடுகின்றனர். அவரிடம் ஏற்கனவே இரண்டு தொலைபேசிகள் உள்ளதாகவும், இறப்பு விசாரணையின்போது கூறப்பட்டுள்ளது.

மரண விசாரணையை, திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Be the first to comment on "யாழில் கைத்தொலைபேசியினால் 17 வயது மாணவனுக்கு நடந்த வந்த கொடூரம்"

Leave a comment

Your email address will not be published.


*