அதிகாலையில் பேருந்தில் பயணித்தவர்களுக்கு நடந்த சோகம்!

பேருந்து மீது மரமொன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியத்தலாவை – ஹப்புத்தளை வீதி, கல்கந்தைப் பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – பதுளை வழித்தடத்தில் பயணிக்கும் பேருந்தே விபத்துக்கு உள்ளானது.விபத்தில் 24 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றுமொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹப்புத்தளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Be the first to comment on "அதிகாலையில் பேருந்தில் பயணித்தவர்களுக்கு நடந்த சோகம்!"

Leave a comment

Your email address will not be published.


*