மகனின் புகைப்படத்தில் தோன்றிய ஆவி: தூக்கம் தொலைத்த தாய்

பிரித்தானியாவின் Northumberlandஇல் பார்க்குக்கு சென்றபோது எடுக்கப்பட்ட தனது மகனின் புகைப்படங்களை பார்வையிட்ட Laura Watson தனது மகனான Byrin Watsonஇன் பின்னால் நின்ற ஆவியைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அதுவும் ஒரு குழந்தையின் உருவம், அது Byrin Watsonஇன் தோள் மீது கை வைத்துக் கொண்டு வெறித்துப் பார்த்துக் கொண்டு இருப்பது புகைப்படத்தில் பதிவாகியுள்ளது.

இதற்கு முன் இது போன்ற விடயங்களில் நம்பிக்கை இல்லாத Lauraவுக்கு இந்த புகைப்படத்தைப் பார்த்ததும் பயம் பிடித்துக் கொண்டது.

இரவுகளில் தன்னால் தூங்க முடியவில்லை என்றும் தனது மகனின் பின்னாலேயே அந்த ஆவி வீட்டுக்கு வந்திருக்குமோ என்ற அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது கணவர் வேறு நைட் டியூட்டியில் இருக்க பயந்து சாகிறார் Laura. இந்த செய்தி வெளியானதும் சிலர் இது போட்டோ ஷாப் செய்யப்பட்ட புகைப்படம் என்று விமர்சித்திருந்தனர்.

தனக்கு தொழில்நுட்பம் குறித்து எதுவும் தெரியாது என்று கூறியுள்ள Laura அதேபோல் தாங்கள் பார்க்குக்கு சென்றபோது வேறு யாரும் அங்கில்லை என்பதையும் உறுதி செய்துள்ளார்.

பல மாதங்களுக்குமுன் ஒரு சிறுவன் பார்க் அருகில் உள்ள ஏரி ஒன்றில் மூழ்கி இறந்து விட்டதாக ஒரு செய்தி உலவுவதாகவும் அது உண்மையா இல்லையா என்று தனக்கு தெரியாது என்றும் கூறும் Laura அச்சத்துடன் நாட்களைக் கழிக்க பலர் சமூக வலைத்தளங்களில் அவருக்காக பிராத்தனை செய்வதாக கூறியுள்ளார்கள்.

Be the first to comment on "மகனின் புகைப்படத்தில் தோன்றிய ஆவி: தூக்கம் தொலைத்த தாய்"

Leave a comment

Your email address will not be published.


*