நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த கேங்ஸ்டர்


ராஜஸ்தான் தாதாவான லாரன்ஸ் பிஷ்ணோய், பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

“ஜோத்புரில் சல்மான் கான் கொல்லப்படுவார். அதற்கு பின், எங்களுடைய உண்மையான அடையாளம் என்னவென்று அவருக்கு தெரியவரும்” என்று பிஷ்ணோய், ஜோத்பூர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போது, செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

வர்த்தகர்களை பயமுறுத்தி மிரட்டி வந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்காக பிஷ்ணோய் கைது செய்யப்பட்டு இருந்தார். போலீஸ் தன்னை பொய்யான வழக்கில் கைது செய்து வந்துள்ளார்கள், எனக்கு எதிராக ஒரு சாட்சியும் வரவில்லை. அவர்கள் என்னிடம் பெரிய குற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். என்னால் சல்மான் கானை கொல்ல முடியும். அதுவும் ஜோத்புரில் என்றார் பிஷ்ணோய்.

1998ம் ஆண்டு சல்மான் கான் உட்பட சில துணை நடிகர்கள் சேர்ந்து, மானை வேட்டையாடி கொன்றனர். இது தொடர்பான வழக்கை பிஷ்ணோயின் சமூகம் பெரிதாகி விட்டது. அன்றில் இருந்து இன்று வரை அவர்கள், சல்மான் கானை வில்லனாக தான் பார்க்கின்றனர்.

ஆனால், சல்மான் கானை கொல்வேன் என்று சொல்லி ஒரு பரபரப்பை கிளம்பிவிட தான் பிஷ்ணோய், அவ்வாறு கூறியிருக்க வேண்டும் என்று ஒரு பக்கம் பேச்சு எழுந்துள்ளது.

குறிப்பிடப்படும் கேங்ஸ்டராக விளங்கும் பிஷ்ணோய், கொலை, ஹை-ஜேக், ஸ்னேச்சிங், மிரட்டல் போன்ற 20 வழக்குகளில் குற்றம் சட்டப்பட்டுள்ளார்.

Be the first to comment on "நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த கேங்ஸ்டர்"

Leave a comment

Your email address will not be published.


*