தனியார் பேருந்து சாரதியின் வெறிச்செயல்!! மஞ்சள் கோட்டில் தலை சிதறி பலியான யுவதி- படங்கள்

இன்று காலை (31.05.2018) 8.15 மணியளவில் இடம்பெற்ற கோரவிபத்தில் பெண் ஒருவர் தலை சிதறி பலியாகியுள்ளார் என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை கொழும்பு ஆர்மர் தெருவிலுள்ள ஜெத்தவநாரம கோவிலிற்கு செல்வதற்காக வீதியை கடக்க முயன்ற பெண் ஒருவரை தனியார் பேருந்து ஒன்று மஞ்சள் கடவையில் வைத்து மோதி தள்ளியது.

இதில் சம்பவ இடத்திலேயே பெண் தலை சிதறி பலியானார்.

WP NA 4482 எனும் இலக்கமுடைய கடவத்த தொடக்கம் (138 லைன்) கோட்டை வரை பயணிக்கும் பிரசன்னா சூப்பர் லைன் எனும் தனியார் பேருந்தே குறித்த பெண்மீது மோதியுள்ளது.

பலியான பெண் தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெறா நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிசார் தனியார் பேருந்தின் சாரதியை கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Be the first to comment on "தனியார் பேருந்து சாரதியின் வெறிச்செயல்!! மஞ்சள் கோட்டில் தலை சிதறி பலியான யுவதி- படங்கள்"

Leave a comment

Your email address will not be published.


*