வைத்தியர்களின் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண் பலி – கொழும்பில் விபரீதம்

வயிற்று வலியால் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியர்கள் மற்றும் தாதியின் கவனக்குறைவால் தனது 24 வயதான மனைவி மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக, குறித்த பெண்ணின் கணவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பு 15 புளுமென்டல் வீதியில் வசிக்கும் மிலானி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வயிற்று வலி காரணமாக சிசிச்சை பெறுவதற்காக கடந்த 19ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 39வது அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் வைத்தியர் மற்றும் தாதியின் கவனக்குறைவால் அவர் உயிரிழந்துள்ளார் என குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

“எனது மனைவியின் நோய் தொடர்பில் வைத்தியர்கள் மற்றும் தாதி அந்த அளவிற்கு அக்கறை செலுத்தவில்லை. இதனால் எனது மனைவி மற்றும் குழந்தையை இழந்துவிட்டேன். இதற்கு நியாயமான விசாரணை அவசியம் என உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆதாரங்களுக்கு அமைய வைத்தியர்கள் மற்றும் தாதிகளின் பக்கத்தில் தவறுகள் இருப்பது தெரிய வந்துள்ளதாக, கொழும்பு நகர மேலதிக மரண விசாரணை அதிகாரி இரேஷா தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வைத்தியர்கள் பலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கு அனுமதிக்க முடியாது. கவனயீனத்தினால் தாய் மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளதாக விசாரணை அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

Be the first to comment on "வைத்தியர்களின் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண் பலி – கொழும்பில் விபரீதம்"

Leave a comment

Your email address will not be published.


*